சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’ டிரைலர் எப்போது? படக்குழுவினர் அறிவிப்பு!

சனி, 3 டிசம்பர் 2022 (14:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஜனவரி 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளில் ‘பாபா’ படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது 
 
‘பாபா’ படம் மீண்டும் எடிட் செய்யப் பட்டதாகவும் 3 மணி நேர படம் இரண்டு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், அதே போல் சில வசனங்கள் மாற்றப்பட்டுள்ளதாக மீண்டும் ரஜினிகாந்த் டப்பிங் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ‘பாபா’ படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ‘பாபா’ படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்