பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்; வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2017 (10:23 IST)
நடிகை சன்னி லியோன் தற்போது படங்கள், விளம்பர படங்கள் என தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார். படப்பிடிப்பில் பாம்பு காட்டி பயமுறுத்தியவரை, சன்னி லியோன் பழிவங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் படப்பிடிப்பு ஒன்றில் கதையை படித்துக் கொண்டிருந்த போது படக்குழுவினர் அவர் முன் பொம்மை பாம்பைக் காட்டி பயம் காட்டினர். அதை அறியாத சன்னி லியோன், அதனை உண்மை பாம்பென்று நம்பி  பயந்து கதறியுள்ளார்.
இந்நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் இரண்டு கேக்கை கொண்டுசென்று அவரின் முகத்தில் அடித்துள்ளார். அந்த வீடீயோவை பதிவிட்டு "என்னுடன் மோதினால் இது தான் நடக்கும்" என சன்னி லியோன் ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்