என்னை கிளாமர் கேர்ள் ஆகவே பார்க்கிறார்கள்.. கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி- பூஜா ஹெக்டே!

vinoth

புதன், 13 ஆகஸ்ட் 2025 (15:17 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே.  இதற்கிடையில் அவருக்கு தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார். இந்த படத்துக்கு பிறகு தமிழில் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்தார். அதையடுத்து லாரன்ஸின் ‘காஞ்சனா4’ மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் வட இந்தியாவில் தன்னை இயக்குனர் கிளாமர் வேடங்களில் மட்டுமே பார்ப்பதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக “அவர்கள் நான் நடித்த தென்னிந்திய படங்களைப் பார்ப்பதில்லை என நினைக்கிறேன். எனக்கு ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாபாத்திரத்தைக் கொடுத்து என்னுடைய நடிப்புத் திறமையைக் காட்ட உதவிய கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்