லேட்டஸ்ட் அப்டேட்: ‘தளபதி 63’ பட உரிமையைக் கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (15:21 IST)
தளபதி 63 படத்தின் தொலைக்காட்சி உரிமை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
 

 
நடிகர் விஜய் - அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.  பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்த விஜய்யின் ஃபேவரைட் பாடலாசிரியர் விவேக்கும் பாடலெழுதுகிறார் .
 
கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில் விஜய்  விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் . இதற்கு ஏற்ற வகையில் தன்னுடைய உடலமைப்பையும் மெருகேற்றிய விஜய், கடந்த ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விறுவிறுப்பாக நடித்துவருகிறார். 
 
இந்தப் படத்தில் ஸ்பெஷலாகவும் ,  மிகப் பிரமாண்டமாகவும்  ஒரு பாடலை வைத்துள்ளார் அட்லீ. அந்தப் பாடலில், விஜய்யுடன் சேர்ந்து 1000 குழந்தைகள் நடனமாடினர். இது விஜய்யின் அறிமுகப் பாடலாக அமைந்துள்ளது.
 
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்,  இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘சர்கார்’ படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. எனவே, அதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் சன் டிவியிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்