சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 4 படங்களின் ரிலீஸ் தேதி இதோ!

புதன், 1 செப்டம்பர் 2021 (13:31 IST)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த, தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட், சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் மற்றும் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நான்கு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த நான்கு படங்களும் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் நடித்துவரும் அண்ணாத்த படம் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்ற செய்தியைப் பார்த்தோம்.
 
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் தனுஷ் நடித்துவரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்