’’கர்ணன்’’ ரொம்ப ஸ்பெஷலான படம் - நடிகர் தனுஷ் கடிதம்

புதன், 31 மார்ச் 2021 (16:05 IST)
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்,இப்படத்தின் பிரஸ் மீட்டிங்கில் படத்தின் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் தனுஷ் தி கிரெ மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், கர்ணன் பட விழாவில் தனுஷ் கலந்துகொள்ளாதது குறித்து  அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கர்ணன் பட பிரஸ் மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களுடன் இருந்திருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருப்பேன். கர்ணன் ரொம்ப ஸ்பெஷலான படம்.என்னைய உங்க கர்ணனா மாத்துனதுக்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. என்னையும் நான் தேர்வு செய்கிற கதைகளை நம்புகிற தாணு சாருக்கு நன்றி.அவர் என் மீது வைத்துள்ள கண்மூடித்தனமான நம்பிக்கை என்னை ஒரு  நடிகன் என்ற பொறுப்பை ஞாகப்படுத்திட்டே இருக்கிறது….எனக்கு தொடர்ந்து ஆதவு தரும் என் ரசிகர்களுக்கும் நன்றி.இங்கு வந்த எல்லோருக்கும் நன்றி. கர்ணன் சீறும் கேள்விகளை ஏந்தி வருவான் எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் 4 வது பாடல் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

. @dhanushkraja 's special message at the #KarnanPressMeet pic.twitter.com/UmHHIBUxIz

— Ramesh Bala (@rameshlaus) March 31, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்