சுல்தானை வென்று முதலிடத்தைப் பிடித்த கபாலி

Webdunia
சனி, 14 மே 2016 (13:00 IST)
இந்திய திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற சினிமா டீசர் என்ற பெருமையை நேற்று கபாலி தனதாக்கிக் கொண்டது.


 

 
 
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் 66 வினாடி டீசர் வெளியானது முதல் சாதனைகளை உடைக்கத் தொடங்கியது. அமீர் கானின் தூம் 3, சல்மான் கானின் சுல்தான் படங்களின் டீசர் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கபாலி டீசர் கடந்துள்ளது.
 
நேற்று 13 -ஆம் தேதி கபாலி படத்தின் டீசர் 17.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இது சுல்தானின் டீசர் பார்வையாளர்களின் (17 மில்லியன்) எண்ணிக்கையைவிட அதிகம்.
 
இந்திய அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையையும் கபாலி பெறுமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு.
அடுத்த கட்டுரையில்