சூர்யா & சுதா கொங்கரா கூட்டணி… கிளப்பி விட்டது யாருப்பா!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (10:32 IST)
சூர்யா மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஒரு செய்தி சில தினங்களாகப் பகிரப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது சூரரைப் போற்று திரைப்படம். இப்போது பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றி மூலம் கவனம் பெற்ற சுதா கொங்கரா, விஜய் அஜித் ஆகியோர்களுக்கு கதை சொல்லியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவரின் அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுத, சூர்யாவே கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என்பதை இப்போது சம்மந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். சூர்யா வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். அதே போல சுதாவும் இந்தி சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்க உள்ளார். அதனால் இந்த கூட்டணி இப்போது சாத்தியமில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்