ஆர்.ஆர்.ஆர்., படக்குழுவினர் வெளியிட்டுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (11:55 IST)
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர்., திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்கு இணையாக இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்