மரணத்திற்கு பின் தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி

வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:49 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் துபாய்க்கு திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எதிர்பாராத வகையில் குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
 
இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. 'மாம்' என்ற படத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியில் தயாரான 'மாம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளாம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. நான்கு மொழிகளிலும் ஸ்ரீதேவி தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்