சிறந்த தமிழ் திரைபடத்திற்கான தேசிய விருது பெற்ற டூலெட்
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (12:30 IST)
சிறந்த தமிழ் திரைபடத்திற்கான தேசிய விருது டூலெட் என அறிவித்துள்ளனர். இன்னும் திரைக்கு வராத இந்த திரைப்படத்தினை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ளார்.
சென்னையில் வீடு தேடி அலைப்பவர்கள் படும்பாட்டை, இப்படத்தில் தெளிவான படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஒரு கணவன், மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளவர் சென்னையில் வீடு தேடி அலைவதை, இப்படத்தில் அழகாக கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த திரைப்படம் கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவலில் 2017-ன் சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது. ஒளிப்பதிவாளர் செழியன் இதில் இயக்குநராக உருவமெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.