’’பாலிவுட்டில் என்னை உளவு பார்க்கின்றனர்’’ - கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

திங்கள், 6 பிப்ரவரி 2023 (18:48 IST)
பாலிவுட்டில்  தன்னை உளவு பார்ப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர்  பாலிவுட் சினிமாவில் சிலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகிறார்.

இந்த நிலையில்,  இப்போது ஒரு புதிய குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

அதில், தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வந்து உளவு பார்க்கிறார்கள் என்றும் தெருக்கள், பார்க்கிங் இடஙள், மற்றும் வீட்டு  மாடியிலும் தன்னை உளவு பார்ப்பதாகவும் இதற்கென ஜூம் லென்ஸை கையில் வைத்திருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.
 

ALSO READ: சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து - நடிகை கங்கனா கண்டனம்!
 
நடிகை கங்கனா ரனாவத் யாருடைய பெயரையும் குறிப்பிடாத நிலையில், அவர், ரன்பீர்- ஆலியா பட் பற்றி பேசுவதாக  நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழில், பா.விஜய் இயக்கத்தில் தலைவி உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்