11 ஆண்டுகால காதலரைக் கரம்பிடித்த நடிகை சித்ராஷி ராவத்!
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:18 IST)
பிரபல பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் தன் 11 ஆண்டுகால காதலரான துருவாதித்யா பக்வானியை திருமணம் செய்து கொண்டார்.
பிரபல பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாலின் ஷாருக்கானுடன் சக் தே இந்தியா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதையடுத்து, லக், பிளார் ஹேம், தேரே நன் ஹோ அகயா, பியரெம் மாயி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சித்ராஷி ராவத் துருவாதித்யா பகவானி என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் இருவரும் சித்ராஷி ராவத்- துருவாதித்யா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.