தெலுங்கு படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா ஸ்ருதிஹாசன்?

vinoth

வியாழன், 3 ஜூலை 2025 (10:34 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார்.  கடைசியாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ருதிஹாசன் அந்த படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அடிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘டகாய்ட்’ என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தில் அவரை வைத்து எடுத்த ஒரு டீசர்க் காட்சியும் வெளியானது.

ஆனால் இப்போது அவருக்குப் பதில் மிருனாள் தாக்கூர் அந்த படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் போலவே மிருனாள் தாக்கூருக்கும் அதே டீசர் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதிஹாசன் வலுக்கட்டாயமாக படத்தில் வெளியேற்றப்பட்டாரா என்ற சர்ச்சை எழ, படக்குழு அதை மறுத்துள்ளது. ஸ்ருதிஹாசன் சுமூகமாகவே இந்த படத்தை விட்டு வெளியேறினார் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்