6 வருடத்துக்குப் பிறகு சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

வெள்ளி, 16 ஜூன் 2023 (10:29 IST)
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இதற்கிடையில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளார். இந்த வெப் சீரிஸை அவர் அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் பரவி வரும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்