வாடிவாசலுக்காக நானும் காத்திருக்கிறேன்…. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

திங்கள், 21 மார்ச் 2022 (15:23 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்தது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு இன்று நடைபெற்றது.

சென்னை ஈசிஆர் அருகே ஜல்லிக்கட்டு வாடிவாசல் போன்ற செட் போடப்பட்டு அதில் இந்த ஒத்திகை படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் வெற்றிமாறன் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் கலந்து கொண்டதாகவும் இந்த ஒத்திகை படப்பிடிப்பு திருப்தியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் இப்போது நடிகர் சூரி பகிர்ந்துள்ள புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்டின் போது சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரோடு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச நம்மண்ணின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையை உலகறியச் செய்யும் இந்த காவியம். வாடிவாசல் திறக்க நானும் காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்