’சூரரை போற்று’ இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்ப்பு.. புதிய போஸ்டர் ரிலீஸ்..!

Mahendran

வெள்ளி, 14 ஜூன் 2024 (13:01 IST)
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரை போற்று என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

தமிழில் இந்த படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கிய நிலையில் சூர்யாவின் கேரக்டரில் அக்ஷய் குமார் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சூர்யாவும்  சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாகவும் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. 
 
’சர்ஃபிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று சூர்யா தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் அக்ஷய்குமார், சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் உட்பட இந்த படத்தின் குழுவினர்களும் இந்த தகவலை தங்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். சூரரை போற்று, இந்தி ரீமேக் திரைப்படம் பாலிவுட்டிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran

The story of a man who dared to dream big! And for me this is a story, a character, a film, an opportunity of a lifetime! #Sarfira trailer out on 18th June.

Catch Sarfira on 12th July, only in cinemas. pic.twitter.com/KMSHDFbBEl

— Akshay Kumar (@akshaykumar) June 14, 2024
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்