வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் எப்பதான் தொடங்கும்… சூர்யா ரசிகர்களுக்கு வந்த உற்சாக தகவல்!

vinoth

வியாழன், 13 ஜூன் 2024 (07:02 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் இப்போது விடுதலை 2 படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங்கில் இருக்கும் வெற்றிமாறன், இன்னும் இரு மாதங்களில் அதன் பணிகள் மொத்தத்தையும் முடிக்கவுள்ளாராம். அந்த படம் ரிலீஸ் ஆனதும் அக்டோபர் இறுதியில் வாடிவாசல் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே வாடிவாசல் திரைப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்