'இதான் உங்க அப்டேட் லட்சணமா? 'தளபதி 63' படக்குழுவினர்களை வறுத்தெடுத்த ரசிகர்கள்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (18:16 IST)
அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் இருவேடங்களில் நடித்து வரும் 'தளபதி 63' படம் குறித்த அப்டேட்டுக்களை தினம் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர். ஆனால் படக்குழுவினர் அப்டேட்டுக்களை விடுவது போல் தெரியவில்லை
 
இந்த நிலையில் ஒருமணி நேரத்திற்கு முன்னர் 'தளபதி 63' அப்டேட் வெளிவரும் என்று டுவிட்டரில் செய்தி வெளியானது. அதனையடுத்து 'தளபதி 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளிவர வாய்ப்பு இருப்பதாக விஜய் ரசிகர்கள் சுறுசுறுப்பாகினர். சரியாக ஆறு மணிக்கு அந்த அப்டேட்டும் வந்தது. ஆனால் அந்த அப்டேட், 'தளபதி 63' படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளதாக வெளிவந்துள்ளது. இந்த மொக்கையான அப்டேட்டை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகினர். இதுதான் உங்கள் அப்டேட் லட்சணமா? ஆடியோ உரிமையை யார் வாங்கினால் எங்களுக்கு என்ன? அது வியாபாரம், அது எப்படி அப்டேட் ஆகும்? என ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் விரைவில் இந்த படம் குறித்த அப்டேட்டை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டனர்., அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் ஒரு அட்டகாசமான அப்டேட் குறித்த செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்