'விவேகம்' பாடல் உரிமையை 6வது முறையாக பெற்ற பிரபல நிறுவனம்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (06:50 IST)
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் பாடல்களின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் மிக விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


இந்த நிலையில் 'விவேகம்' படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் மிகப்பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளது. ஏற்கனவே அஜித் நடித்த 'மங்காத்தா', 'பில்லா 2', 'ஆரம்பம், 'என்னை அறிந்தால்', 'வேதாளம்' ஆகிய படங்களின் இசை உரிமையையும் இதே நிறுவனம் தான் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத்தும் ஹாலிவுட் தரத்தில் பின்னணி இசை அமைத்துள்ளதாகவும் வேதாளம் படத்தை அடுத்து அனிருத்துக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்