பாலிவுட் நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் படுகாயம் அடைந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில், காரில் சென்ற சோனாலி சூட் மற்றும் அவரது உறவினர் படுகாயம் அடைந்துள்ளனர். சோனாலி சூட் தங்கை சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். காயமடைந்த இருவரும் தற்போது நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இருவரும் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.