சோனியா காந்தி எங்கள் மாநிலத்தில் போட்டியிட வேண்டும்: தெலுங்கானா முதல்வர்..!

Siva

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:39 IST)
நாடாளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வேண்டும்  என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
 
சோனியா காந்தி இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போது ராமர் கோவில் விவகாரம் காரணமாக உத்தரபிரதேசத்தில் மீண்டும் போட்டியிட்டால் அவர் தோல்வியடைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவர் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் ஒன்றில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சோனியா காந்தி எங்கள் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா மாநிலம் முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இதனை அடுத்து சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
சோனியா காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபேலி என்ற தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அந்த தொகுதியில் அவர் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்று கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ராகுல் காந்தி கேரளாவில் மீண்டும் வயநாடு தொகுதியில் தான் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது சோனியா காந்தியும் தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்