இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசிய போது, இந்த யாத்திரை எதற்காக என்று பலரும் கேட்கிறார்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக ஆகியவை சித்தாந்த ரீதியாக வெறுப்பை பரப்பி வருகின்றன. ஒரு மதம் மற்றொரு மதத்துக்கு எதிராக நிறுத்தப்படுகிறது. மக்கள் மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகவே, வெறுப்பு சந்தையில் அன்பு எனும் கடையை நாங்கள் திறந்துள்ளோம். நாட்டின் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை இந்த யாத்திரை நிகழ்த்தும். நாங்கள் புதிய கண்ணோட்டத்தை, சித்தாந்தத்தை வழங்கி உள்ளோம்" என கூறினார்.