அமித்ஷாவுக்கு எதிரான அவதூறு....பிரபல நடிகர் கைது ! ரசிகர்கள் அதிர்ச்சி

திங்கள், 4 ஜனவரி 2021 (17:45 IST)
பிரபல பாலிவுட் நடிகர் முனாவர் பாருகி. இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியவதற்காக  கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் முனாவர் பாருகி பொதுமேடை நிகழ்ச்சிகளில் பேசிவருகிறார். இந்நிலையில் இந்தூர் டூகான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்துக்கடவுள்கள் மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு எதிராக  விமர்சனங்கள் தெரிவித்தனர்.

மேலும், பாஜக எம்.எல்.ஏ. மாலினி லட்சுமனன் சிங்  மகன் ஏக்லய்வா சிங் கவுர் நடிகர் முனாவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

நடிகர் முனாவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் பாருகியை கைது செய்தனர். அவருடன் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #munawarfaruqui-

இதனால் நடிகர் முனாவர் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்