சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர்தான் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இது அதிமுகவை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை டாக்டர் ராம்தாஸ் அறிவிப்பார் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக கூட்டணியில் உள்ள மாநில கட்சியாக பாமக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் பாஜக எப்படி அவரை ஏற்றுக் கொள்ளும் என்றும் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார் குஷ்புவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது