உங்கள் அன்பை இதயங்களில் வைத்திருக்கிறேன்… சிவராஜ் குமார் நெகிழ்ச்சி!

சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:02 IST)
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் கன்னட மொழியில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவிலும் ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்நிலையில் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை அடுத்து நன்றி தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார். அதில் “ரசிகர்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இயக்குனர் நெல்சனுக்கு நன்றி. ரஜினிசாரோடு நடிக்க பலர் காத்திருக்கின்றனர். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ரசிகர்களின் அன்பை எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்