சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு படம்.. தயாரிப்பு தரப்பு திடீரென போட்ட நிபந்தனை.. டிராப் ஆகுமா?

Siva

புதன், 10 செப்டம்பர் 2025 (17:57 IST)
நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகவிருந்த படம், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட தயக்கத்தால் தள்ளிப்போவதாக தெரிகிறது.
 
வெங்கட்பிரபு இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில்  ரிலீஸான 'மதராஸ்' படத்தின் ரிசல்ட் சுமாராக இருந்ததால், தயாரிப்புத் தரப்பு தயக்கம் காட்டியுள்ளது.
 
சிவகார்த்திகேயனுக்கு ₹40 கோடி, வெங்கட்பிரபுவுக்கு ₹15 கோடி என சம்பளமே ₹55 கோடியை எட்டிய நிலையில், படத்தின் மொத்த பட்ஜெட் ₹100 கோடியைத்தாண்டும் என்று கூறப்படுகிறது.
 
வழக்கமாக, வெங்கட்பிரபு படங்களுக்கு இசையமைப்பவர் யுவன் சங்கர் ராஜா. ஆனால், சத்யஜோதி தரப்பு, இந்த படத்துக்கு அனிருத்தை இசையமைக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அனிருத் சம்பளம் ₹20 கோடிக்கு மேல் இருக்கும் என்பதால், படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரிக்கும்.
 
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், சிவகார்த்திகேயனிடம் லாபப் பங்கு அடிப்படையில் சம்பளம் பெற முடியுமா என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அவர் ஒப்புக்கொண்டால் படத்தை உடனடியாக தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்