தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் வாக்களிப்பு நாளுக்குப் பின்னர் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு அரசியல் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.