பாலிவுட் செல்கிறார் சிவகார்த்திகேயன்.. இயக்குனர் இந்த பிரபலமா?

Mahendran

சனி, 25 அக்டோபர் 2025 (16:39 IST)
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன், பாலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
 
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் உள்ள பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்கு சென்ற வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
 
'பத்மாவதி', 'ஹீரமண்டி', தேசிய விருது வென்ற 'கங்குபாய் கத்தியவாடி' போன்ற பிரமாண்டப் படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியுடன் அவர் இணையும்பட்சத்தில், சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் பான் இந்தியா நட்சத்திரமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் வரவிருக்கும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. தேசிய விருது பெற்ற சுதா கொங்காரா இயக்கத்தில் அதர்வா, ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ள இந்த படம், அதே சமயத்தில் வெளியாகும் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்குப் போட்டியாக களமிறக்கப்பட உள்ளதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்