ஐஸ்வர்யாவின் தந்தையாக வரும் விவசாயி நல்ல நல்ல விஷயங்களை சொல்லனும். அதற்கு எமோசன காட்டனும் அப்படின்னு நினைச்சப்ப அருண்ராஜா எங்கிட்ட சத்யராஜ் சாரத்தான் முதன்முதல்ல சொன்னாரு. கதை சொல்லப்போனோம் சத்யராஜ் சார் கிட்ட. நான் ரெம்ப டென்சாக இருந்தேன். ஏன்னெனில் சத்யராஜ் சார்கிட்ட வந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல அப்படி ஒரு அனுபவம் இருக்கு. பர்ஸ்ட் அப் கேட்டுட்டு இதுக்கு மேல என்ன வரும்னு தெரியும் பொன்ராம்! தயவு செஞ்சு கிளம்புங்கனு சொல்லி அனுப்பிவைச்சுட்டார். அப்புறம் கிளைமேக்ஸ் இப்படித்தான் வரும்னு சொல்லிட்டு சம்மதம் வாங்குனோம். அதனாலா எனக்கு டென்சன் ஜாஸ்தியாகிடுச்சு. அப்ப சத்யராஜ் சார், இந்த கதை எனக்கு எத்தமாதிரி இல்லயே என்று சொன்னார்.
நான் அருண்ராஜாகிட்ட என்னத்தடா சொன்ன, கரெக்டாதான் சொன்னயா எனறு திட்டினேன். அதற்கு அருண்ராஜா, நான் சொல்லவேண்டியத கரெக்டாதான் சொன்னேன் என்றார். அப்புறம் மலேசியா நட்சத்திர கிரிக்கெட்டுக்கு போனபோது, இந்தக்கதை நல்லாயிருக்கு நானே பண்ணிடுறேன் என்றார். அதன்பிறகே இந்த படம் குறித்து எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. சத்யராஜ் சாருக்கு மிகவும் நன்றி" இவ்வாறு சிவகார்த்திகேயன் சத்யராஜ் குறித்து கூறினார்.