"இந்த படத்தை எடுக்கனும்னு முடிவு பண்ணிய பிறகு ஆடிசன்லாம் வச்சோம். செலக்ட் பண்ணுனோம். ஐஸ்வர்யாகிட்ட கேட்டேன். அவங்க எங்கிட்ட கிரிக்கெட் தெரியாது, ஆனால் நடிக்கிறேன்னு சொன்னாங்க, எனக்கு ஒன்னுமே புரியல. நல்லா நடிக்கிறாங்க, இன்டர்நேசனல் கிரிக்கெட்டுன்னு சொல்றோம்.
அதனால இந்த படத்தை எல்லாரும் பார்ப்பங்க யாரும் ஐஸ்வர்யாவ பார்த்து சிரிச்சுடக்கூடாதுன்னு நினைச்சோம். ஐஸ்வர்யா எங்ககிட்ட என்னை டெஸ்ட் பண்ணி பாருங்க, அப்படீன்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையால்தான் இந்த படம் இவ்வளவு பெரிய அளவுக்கு அழகாக வளர்த்து நிற்குது. நிறைய அடி, நிறைய காயங்கள் அதெல்லாம் இந்த மாதிரி படங்கள் பண்ணும் போது பட்டுத்தான் ஆகனும்னு நினைக்கிறேன். இந்த ரோல் பண்ண ஐஸ்வர்யா நிறைய முயற்சி பண்ணியிருக்காங்க.அதுனால தான்இப்படி வந்துருக்கு." என்றார்.