தர்பார் படத்துக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் நடிக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இதையடுத்து இன்னும் சில நாட்களில் சிவகார்த்திகேயன் படத்த்தை மீண்டும் தொடங்கவுள்ளார் முருகதாஸ். விரைவில் ஷூட்டிங்கை முடிக்கவுள்ளதாகவும், மே 1 ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதே நாளில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படமும் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.