கிரிக்கெட் விளையாடும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி; வைரலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (17:07 IST)
படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி  வைரலாகியுள்ளது. 
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்முடிந்துள்ள நிலையில், படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது என்று வேலைக்காரன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்த பட வேலைகள் முடிந்ததை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த  படத்தில் பிசியாகிவிட்டார்.
 
பொன். ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் சிம்ரன், நெப்போலியன் ஆகியோரும்  உள்ளனர். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 
 
படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன், சூரி மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்கள் கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்