பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

vinoth

சனி, 25 மே 2024 (07:36 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவன ட்தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதை என்று சொல்லப்படுகிறது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.

இதையடுத்து இப்போது படத்தின் பிஸ்னஸைப் படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும்தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்