விருமன் பாடல் சர்ச்சை…. அதிதி ஷங்கருக்கு ஆதரவாக ராஜலட்சுமி!

வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:12 IST)
விருமன் படத்தில் இடம்பெற்ற மதுர வீரன் பாடலை அதிதி ஷங்கர் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் பாடி இருந்தனர்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை மதுரையில் நடந்தன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மதுர வீரன் என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து அதிதி பாடியுள்ளார். ஆனால் இந்த பாடலை முதலில் பாடியவர் விஜய் டிவி புகழ் ராஜலட்சுமியாம். ஆனால் நட்சத்திர அந்தஸ்து கருதி, அவரின் குரலை நீக்கிவிட்டு தற்போது அதிதி பாடிய வரிகளை இணைத்துள்ளார்களாம். இதனால் பாடகி ராஜலட்சுமி தற்போது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அதிதி ஷங்கரை விமர்சிக்கும் விதமாக கருத்துகள் வெளியாகின. இந்நிலையில் ராஜலட்சுமி அதிதி ஷங்கருக்கு ஆதரவாக “சினிமாவில் இதுபோல நடப்பது எல்லாம் சாதாரணம். யாரும் அதிதி ஷங்கரை யாரும் இதற்காக விமர்சிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்