கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. 1980 களில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜ் கமலுடன் நடித்த காக்கி சட்டை திரைப்படம் சத்யராஜுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.