தமிழ் சினிமாவில் பல படங்களில் இணைந்து நகைச்சுவை பாத்திரங்களில் நடித்தவர்கள் வடிவேலுவும் சிங்கமுத்துவும். வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்து வந்தார் சிங்கம்புலி. ஆனால் வடிவேலு நிலம் வாங்கியது சம்மந்தமாக சிங்கம்புலி அவரை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம் சாட்டினார். அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர்.
ஆனால் சிங்கம்புலி தொடர்ந்து பல நேர்காணல்களில் வடிவேலு குறித்து அவதூறாகப் பேசிவந்தார். இதையடுத்து யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார். சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.