இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். கடைசியாக அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் மோசமான எதிர்ம்றை விமர்சனங்களைப் பெற்று அவரை கேலிக்குரியவராக்கியது.
இந்நிலையில் அவர் அடுத்த அஜித் படத்தை இயக்குவார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அஜித் ரசிகர்கள் அவர் மட்டும் வேண்டாம் என புலம்பினர். அதனால் அஜித், தற்போதைக்கு நாம் படம் பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது தனக்கு சிறுத்தை என்ற மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்த சிவாவுக்கு கார்த்தி கைகொடுக்க முன்வந்துள்ளாராம். இப்போது கார்த்திக்காக ஒரு கதையை சிறுத்தை சிவா உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.