பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.
இதை உறுதி செய்துள்ள சிம்ரன் தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது மிகப்பெரிய பொறுப்பு, பிரசாந்துடன் மீண்டும் நடிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இயக்குனர் பிரட்ரிக்கின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மிகவும் சிறப்பாக இருந்தது எனக் கூறியுள்ளார்.