பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் என்பதும் அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்ல்ப்படுகிறது. கதைப்படி கார்த்திக்கின் கதாபாத்திரம் ஒரு ஓய்வு பெற்ற நடிகராகவே வருவதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலக பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தியில் தபு நடித்த வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இப்போது சிம்ரன் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசாந்துடன் ஜோடியாக நடித்த அவர் திரைப்படங்கள் பெருவெற்றி பெற்றவை என்று குறிப்பிடத்தக்கது.