’’கேஜிஎஃப்’’பட இயக்குநருடன் கைகோர்க்கும் நம்ம ’’பாகுபலி’’ ஹீரோ !

திங்கள், 30 நவம்பர் 2020 (16:28 IST)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி1,2 ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் புகழும் பெருகிறது. மார்க்கெட்டும் எகிறியது.
 
 சூப்பர் ஸ்டார் அளவுக்கு அளவு இமேஜும் ஏகத்தும் அதிகரித்துள்ளது. அதனால் அடுத்து அவர் நடிக்கவுள்ள திரைப்படம் என்ன என்ன என்ரு சினிமாத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது அவர் ராதே ஸ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அடுத்து, தீபிகா படுகோனேவுடன் ஆதி புருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது.  இந்நிலையில் கேஜிஎஃப் என்ற பெரும் வெற்றிப் படத்தை இயக்கிவரும் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருபவருமான இயக்குநர் பிரசாந்த் நீல்லோடு, பிரபாஸ் இணையவுள்ளதாக தகவல்க் இணையத்தில் பரவி வருகிறது.

பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ள இவர்கள் இருவரும் இணையவுள்ளதால் ஒட்டுமொத்த சினிமாத்துறையினரும் பெரும் அதிசயம் நடக்கவுள்ளது போன்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தச் செய்தி பிரபாஸின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்