இந்த நிலையில், சரியாக நள்ளிரவு 12 மணிக்கு சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி, சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடித்த "பார்க்கிங்" என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, சிம்பு, கமல்ஹாசனுடன் நடித்த "தக்லைப்" திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக ராம்குமார், அஸ்வத் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கத்தில் உள்ள படங்களிலும் நடிக்க உள்ளார். இந்த படங்களின் அறிவிப்புகளும் என்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.