சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு நதியினிலே நீராடும் சூரியன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த படத்துக்காக கௌதம் சொன்ன கதை சிம்புவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால்தான் கதைக்காக முதல் முறையாக எழுத்தாளர் ஜெயமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது அவர் கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். கௌதம் மேனனின் திரை வாழ்வில் முதல் முதலாக அவர் படத்துக்கு மற்றொருவர் கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.