இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படக்குழு பூசணிக்காய் உடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை மிகவும் சிக்கனமாக முடித்துக் கொடுத்துள்ளாராம் வெங்கட்பிரபு. இந்த படத்தை படமாக்க 85 நாட்கள் வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார் வெங்கட்பிரபு. ஆனால் திட்டமிட்டதை விட 17 நாட்கள் கம்மியாக 68 நாட்களில் முடித்துள்ளார் வெங்கட்பிரபு. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு சுமார் 50 லட்சம் வரை சேமித்துக் கொடுத்துள்ளார். சிம்பு படத்தின் படப்பிடிப்பு எல்லாம் வழக்கமான திட்டமிடலை விட அதிக நாட்கள் இழுக்கப்ப்ட்டு தயாரிப்பாளர்களுக்கு கையைக் கடிக்கும் நிலைக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.