வெந்து தணிந்தது காடு: சிம்புவின் அட்டகாசமான புதிய ஸ்டில் வைரல்!

புதன், 9 பிப்ரவரி 2022 (18:37 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகர் சிம்பு சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் அட்டகாசமான ஸ்டைலில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
ராயல் என்பீல்ட் புல்லட்டில் அவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்