மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் ‘திரௌபதி 2’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

vinoth

புதன், 27 ஆகஸ்ட் 2025 (14:15 IST)
இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய சர்ச்சையான திரைப்படங்களான திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்றார். கடைசியாக அவர் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது மோகன் ஜி தன்னுடைய அடுத்த படமாக தன்னுடைய ஹிட் படமான ‘திரௌபதி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்டே கதாநாயகனாக நடிக்கிறார்.

இரண்டாம் பாகத்தின் கதைக்களம் வரலாற்றுக் காலகட்டமாக உருவாவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்