மாஸான குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சிம்பு, கமல்- தக் லைஃப் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

வெள்ளி, 31 மே 2024 (08:56 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. அங்கு சில நாட்கள் நடந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.  இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நாளை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு 15 நாட்கள் முக்கியமான ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில் கமல், சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் மாஸான குத்துப் பாடல் ஒன்றைப் படக்குழு படமாக்கி வருகிறார்களாம். இதில் சிம்பு மற்றும் கமல் ஆகியோர் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்