அவள்; பயம் கூட போதை தான்: சித்தார்த்!!

திங்கள், 30 அக்டோபர் 2017 (19:32 IST)
நடிகர் சித்தார்த் நடிகை ஆண்ட்ரியா நடிப்பி நவம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் அவள். இந்த படத்தை மிலந்த் ராவ் இயக்கியுள்ளார்.


 
 
இந்த படத்தை குறித்து சித்தார்த் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நல்ல பேய் படத்தை பார்ப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும். என்னுடைய பத்து வயதில் பேய் படங்களை பார்க்க துவங்கினேன்.
 
மேலும், அவள் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சிகள் கூட வைக்கவில்லை. பயம் கூட ஒரு போதைதான் என தெரிவித்துள்ளார்.
 
இந்த படத்தின் கதையை சித்தார்த்தும் மிலந்த் ராவும் இணைந்து நான்கு ஆண்டுகளாக எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்