ரஜினி பட டைட்டில் சிபிராஜ்… டிரைலரை வெளியிடும் முன்னணி நடிகர்!

சனி, 7 மே 2022 (08:57 IST)
ரஜினிகாந்த் மற்றும் ராதிகா நடிப்பில் ரங்கா என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

சிபிராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரங்கா’. இந்த படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் அதன் காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை இன்று முன்னணி நடிகரான கார்த்தி வெளியிட உள்ளார். நாய்கள் ஜாக்கிரதை திரைப்படத்துக்குப் பிறகு ஒரு வெற்றிப்படத்துக்காக காத்திருக்கும் சிபிராஜுக்கு ரங்கா திரைப்படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்