கமல் &அன்பறிவ் படத்தில் இணைந்த பிரபல திரைக்கதை எழுத்தாளர்!

vinoth

சனி, 13 செப்டம்பர் 2025 (08:27 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்'  படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து லைகா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குக் காரணம் கமல்ஹாசனின் சம்பளம் மற்றும் பட்ஜெட் ஆகியவை என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கமல் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டதால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் மலையாள சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். இவர் திரைக்கதையில் உருவான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மற்றும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்